காவல்துறையினர் பொய்வழக்கு புனைவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் தற்கொலை முயற்சி- பரபரப்பு


கோவை மாவட்டம், காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஜிலு. இவரது மனைவி இந்து. இவர்கள் அதேப் பகுதியில் வீடு கட்டுவதற்காக தனியாரிடம் கடன் பெற்றுள்ளனர். இதில், முழுமையாக கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், பிஜிலு-விற்கு கடனுதவி அளித்தவர் குண்டர்கள் மூலம் கடந்த மாதம் பிஜிலுவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பிஜிலு மற்றும் அவரது மனைவி இந்து சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில் காவல்துறையினர் இந்த தமிபதியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த இந்த தம்பதியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து, பிஜிலு, இந்து தம்பதியினர் கூறுகையில், நாங்கள் வீடுகட்ட கடன் அளித்த நபர் தற்போது குண்டர்கள் உதவியுடன் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாலர் ராஜ்குமாரிடம் புகார் அளித்த நிலையில் அவர் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டார். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...