என் வழி தனி வழி, என் அப்பா வழி தனி வழி - கோவையில் நடிகர் கவுதம் கார்த்திக் பேச்சு

கோவை சாந்தி திரையரங்கில் ‘இவன் தந்திரன்’ படக்குழுவின் நடிகர் கவுதம் கார்த்திக், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். பின்னர் ‘இவன் தந்திரன்’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரய்லர் திரையிடப்பட்டது. ‘இவன் தந்திரன்’ படத்தின் படக்குழுவினர்களுடன் ரசிகர்களும் பாடல்கள் மற்றும் ட்ரய்லரை கண்டு ரசித்தனர்.



‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் இப்படத்தில் நடித்துள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் என்ற கன்னட நடிகை ஹீரோயினாகவும், அர்ச்சனா ஸ்ரீ, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு வி.என்.மோகன், அபிரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.



முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கவுதம் கார்த்திக்; "நான் தமிழ் படத்தில் இயக்குநர் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். தமிழ் படத்தில் நான் நடிக்க எனது அப்பா முக்கிய காரணம். அப்பாவின் நடிப்பு வேற ட்ரெண்ட், நான் இன்னும் அவருக்கு சமமாக படங்களில் நடிக்கவில்லை. அவர் கூட நடிக்க நான் இன்னும் வளரனும்.

என்னோட ட்ராக்ல தான் நான் நடிகனும், அதுதான் அவரோட ஆசையும். தமிழ் படத்தில நான் இன்னும் பெரிய அளவில் சக்ஸஸ் பண்ணல, தமிழ் படத்தில் நடிக்கும் முன்பு மக்கள் மைண்ட்செட் எப்படி இருக்குனு புரிந்து நடிக்கனும், அது புரியாம தான் நான் நடித்த படம் பெரிய அளவில் ஓடவில்லை.

தற்போது ‘இவன் தந்திரன்’ படத்தில் தமிழ் மக்களுக்கு பிடித்த மாதிரி கதை கிடைத்துள்ளது. இந்த படம் முழுதும் சென்னையில் எடுக்கப்பட்டது. மழையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காமெடி, செண்டிமெண்ட், கமர்சியல் எல்லாம் இருக்கு. இந்த படத்திற்கு பிறகு எனது அடுத்த படம் இந்திரஜித் வெளிவர உள்ளது. ‘இவன் தந்திரன்’ படம் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படவுள்ளது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க சிறந்த படமாக இருக்கும்" என்றார்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...