ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் தடுக்க சுப்பிரமணிய சுவாமி பிளெக் மெயில் செய்கிறார்- இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் தடுக்க ஆதாரமில்லாமல் சுப்பிரமணிய சுவாமி பிளெக் மெயில் செய்வதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு தலைவர்களுடன் கடந்த ஒரு மாதமாக ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்நிலையில் பரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ரஜினிகாந்த் படிக்காதவர். அவர் நிதி மோசடி செய்திருக்கிறார் என்பதால் அரசியிலுக்கு வர தகுதியற்றவர் என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் பேசுகையில் "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த விமர்சனங்களை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அவரை அச்சுறுத்தி அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என மிரட்டப்படுவதால் அவர் அஞ்சப்போவதில்லை. மேலும், சுப்பிரமணிய சுவாமி பிளேக் மெயில் அரசியல்வாதி என்பது அனைவரும் அறிந்ததே. 

ரஜினிகாந்த் நிதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் சுப்பிரமணிய சுவாமியிடம் இருந்தால் உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை விட்டு விட்டு வதந்தி பரப்புவது கண்டிக்கத்தக்கது. அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பது உண்மைதான். அரசியலுக்கு வருவதற்கு கல்வித்தகுதி தேவையில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். காமராஜரைப்போல நல்ல ஆட்சியை கொடுக்க முடியும். சுப்பிரமணிய சுவாமி நற்சான்று யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறாரோ அவர்கள் எல்லாம் சிறைச்சாலைக்கு சென்றிருக்கிறார்கள். எனவே அவர் நற்சான்று கொடுக்காதது நல்லதுதான். 

திராவிட இயக்கத்திற்கு முடிவுகட்ட சிறந்த ஆன்மீகவாதி மற்றும் தேசப்பற்றாளரான ரஜினிகாந்தால்தான் முடியும். அவர் மேல் அவதூறு ஏற்படுத்தி வருகின்ற சுப்பிரமணிய சுவாமி மீது ரஜினிகாந்த் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வழக்கு பதிவு செய்யப்படும்" என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் கூறினார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...