பள்ளி மாணவர்கள் தேர்தல் முறையை தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் தேர்தல்

வாக்களிக்கும் முறை குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள சுகுணா ரிப் மெட்ரிக் பள்ளியில் மாணவர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் டிஜிட்டல் முறையில் வாக்களித்தனர். 100 சதவீத வாக்குப்பதிவு என்பதை இலக்காக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 



இந்த நிலையில், பள்ளி  மாணவ, மாணவியர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் நடைபெற்றது. இதில் 649 மாணவ மாணவிகள், 79 ஆசிரியர்கள், 5 நிர்வாகிகள் உள்ள இப்பள்ளியில் மாணவர் தலைவர், துணை தலைவர், கலை துறை செயலர் மற்றும் விளையாட்டு துறை செயலர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கான தேர்தல் டிஜிட்டல் முறையில் ஐ பேட் மூலம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலின் போது வாக்களிக்கும் முறை பின்பற்றப்பட்டது. 45 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 18 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்போது மாணவ மாணவிகளின் கை விரல்களில் மை வைக்கப்பட்டு வாக்காளர் அடையாள சீட்டு சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆர்வமுடன் வாக்களித்த மாணவ மாணவியர் 18 வயது நிரம்பியவர்களே வாக்களிக்க தகுதியானவர்கள் என்றுள்ள சூழலில் தாங்கள் வாக்களித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...