அரசு பணியாளர்களின் பணிப் பதிவேடு கணினி மயாமாக்கப்படுதல் தொடர்பான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவை மாவட்டத்தில் ஒருங்கினைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு பணியாளர்களின் பணிப் பதிவேடு கணினி மயாமாக்கப்படுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று (ஜூன் 23) நிர்மலா கலைக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை தொடங்கிவைத்து பேசியதாவது:-

நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப்பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, ரூபாய் 288.91 கோடி அரசு நிதியானது ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாக ஒரு தனியார் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைச் செயல்படுத்தக்கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 768 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும், மேலும் இத்திட்டத்தில் அரசின் வருவாயினை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நிகழ்நேர வரவினை உடனுக்குடன் அறிய இயலும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் எண்ம ஒப்பம் மற்றும் விரல் ரேகைப் பதிவுமுறை மூலம் மாநிலத்தின் நிதி நிலை விபரம் உடனுக்குடன் அரசுக்குக் கிடைப்பதுடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும் தேவையற்ற காலதாமதமும் முறைகேடுகளும் தவிர்க்கப்படும்.

இதன் மூலம் பணிப்பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியிலிருந்து விடுபட்டு அலுவலர்கள் தங்களது துறையின் ஆக்கப்பூர்வப் பணிகளில் ஈடுபட முடியும். இதனால் பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப்பதிவேடுகள் மாற்றப்படுவதால் ஏற்படும் காலவிரயம் குறைவதோடு பணிப்பதிவேடு காணாமல் போக்கூடிய சூழ்நிலையும் முடிவுக்கு வரும்.

பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் இக்கணினி ஆவணங்கள் உதவும். ஆதாரப் பூர்வமான பணிவிபரங்கள் கணினியில் இருப்பதனால் பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி முறையாக எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 33869 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல கருவூல இணை இயக்குநர் செல்வசேகரன், மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சேஷாத்ரி, உதவி கருவூல அலுவலர்கள் சபாபதி, சிவராமசுப்பிரமணியன், முகமது சபி, மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...