ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகளவில் யோகா கற்க வேண்டும்- ஈஷாவில் யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் பேச்சு


உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

3 வது உலக யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ்சர்மா, ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யசாகர்ராவ் பேசுகையில், யோகா என்பது இந்தியா உலகிற்கு கொடுத்த பரிசு. மன அழுத்தம் என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது. அதனை நீக்க சிறந்த வழி யோகா. 

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகளவில் யோகா கற்க வேண்டும். யோகா மூலம் போதைக்கு அடிமையானவர்களை மீட்க முடியும். தமிழகம் மற்றும் மஹாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டில் உள்ள 40 பல்கலைக் கழகங்களில் யோகா கற்றுத் தர அறிவுறுத்தப்படும்" என்றார்.

இதற்கு முன்னதாக பேசிய ஜக்கி வாசுதேவ், பள்ளி மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஈஷா யோகா மையம் சார்பில் யோகா கற்றுத்தரப்படுத். நல்ல மனிதர்களை உருவாக்குவதன் மூலமே நல்ல நாட்டை உருவாக்க முடியும். யோகா மூலம் நல்ல மனிதர்களை உருவாக்க முடியும்" என்றார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...