தொழிலாளர் நலத்துறையின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கணினி செயலி அறிமுகம்

கோவை மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கணினி செயலி வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் மூலம் இன்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு செயலி வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு ராஜவீதி துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழிலாளர் நல துணை ஆணையர் தமிழரசி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்சியல் துணை ஆணையர் தெரிவித்ததாவது:-

காலத்திற்கேற்றவாறு நுகர்வோர்களின் பாதுகாப்பை விருத்தி செய்கின்ற வகையில் அதிகபட்ச சில்லரை விலையைவிட அதிகவிலையில் விற்க்கப்படும் பொருட்கள் மற்றும் எடையளவுகள் குறித்து புகார் தெரிவிக்க செயலிகளை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் முத்திரையிடப்படாத எடை அளவுகள் தொடர்பான குறைபாடுகள் மற்றும் தாங்கள் வாங்கும் பொட்டல பொருட்களின் தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர் பெயர், முகவரி, நிகர எடை, பொட்டலமிடப்பட்ட மாதம் மற்றும் வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை இவற்றில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் தொழிலாளர்துறையின் மூலம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள TN-LMCTS எனும் Mobile App மூலம் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் பொட்டல பொருட்கள் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலும் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம். கூகுல் இணையத்தில் பிளே ஸ்டோரில் சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து நுகர்வோர்கள் எளிதில் புகார் தெரிவிக்கலாம். மேலும், கோவை மாவட்ட தொழிலாளர் துறை ஆய்வர்களிடமோ, சரக ஆய்வாளர்களிடமோ புகார் தெரிவிக்கலாம். 

நுகர்வோரிடமிருந்து தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது மேற்கண்ட குறைகள் தொடர்பாக புகார்கள் பெறப்படின் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு சட்டமுறை எடையளவு  சட்டம் 2009 மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே கோவை மாவட்டத்தில் உள்ள நுகர்வோர்கள் சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் தொடர்பான புகார்களை மேற்படி TN-LMCTS எனும் கணினி செயலி பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யலாம். அதற்கான உடனடி நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும் இச்செயலி குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழச்சியில் தொழிலாளர் ஆய்வாளர் முருகேசன் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...