கோவை காந்திபுரத்தில் லிப்டில் சிக்கி தொழிலாளி பலி

கோவை காந்திபுரம், காட்டூர் சோமசுந்தரம் மில்ஸ் சாலை என்.டி.சி பஞ்சாலை எதிரே உள்ள தீபக் (50) என்பவருக்கு சொந்தமான காண்டெக் ரப்பர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் தீபன் மசான் (22). இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இன்று தான் பணியாற்றும் நிறுவனக் கட்டிடத்தில் சரக்கு ஏற்றி செல்லும் லிப்டில் சென்ற போது, மேல் சுவற்றில் தலை மோதி உயிரியிழந்தார்.



தகவல் அறிந்த காட்டூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீபன் மசானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் பெருமளவில் விற்பனை செய்யப்படும் இப்பகுதீயில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...