குடிபோதையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குடிமகன்

கோவை காந்திபுரம்- வேலாந்தாவளம் செல்லும் அரசு பேருந்து எண்: 48A இன்று மாலை 5 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து வேலாந்தவலம் நோக்கி சென்றது.

இந்த பேருந்தில் உக்கடத்தில் பூக்கடை வியாபாரம் செய்யும் செல்வராஜ் உக்கடத்தில் ஏறி சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் வரை செல்ல பயணச் சீட்டு பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, குடிபோதையில் இருந்த செல்வராஜ், சிறிது நேரத்தில் அவர் மற்ற பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறங்கிச் செல்ல வலியுறுத்தி உள்ளார். கிழே இறங்கிய செல்வராஜ் தரையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் மீது வீசியதில் பின்புற கண்ணாடி உடைந்தது.

இதனையடுத்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவரை பிடித்ததுடன் போத்தனூர் காவல் நிலையதிற்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் செல்வராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...