வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘சர்வதேச யோகா தினம்’

வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியின் யோகா மன்றத்தின் சார்பில் ‘சர்வதேச யோகா தினம்’ இன்று பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் முன்னிலை வகித்தார்.



ஜனாதிபதியிடம் ‘பெண் சக்தி விருது’ பெற்ற 98 வயதான நானம்மாள் அம்மையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பத்தாம் வகுப்பு மாணவி கே.ரோஷினி பெனாசிர் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து, மாணாக்கர் முன்னிலையில் யோகா ஆசிரியை நானாம்மாள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார். ஓசோன் யோகா மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் ஒவ்வொரு ஆசனத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

இதில், மாணவ, மாணவியரும் பல்வேறு சந்தேகங்களை விருந்தினரிடம் கேட்டறிந்தனர். சில கடுமையான யோகாசனங்களை தனது 98 வது வயதிலும் மிக சுலபமாக செய்து காட்டியவரை, மாணாக்கரும், ஆசிரியரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் நானம்மாள் முன்னிலையில் மாணாக்கர் தினமும் யோகா செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கிய பெருமையையும் மற்றும் சர்வதேச அளவில் தனது மாணவர்கள் 117 தங்கப்பதக்கங்களைப் பெற்ற பெருமையையும், நானம்மாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் பெருமைமிகு தொன்மையான யோகா கலையை பரப்பும் நற்செயலுக்காக, பள்ளியின் சார்பாக நானம்மாள்-க்கு ‘கோவையின் பெருமை’ என்ற விருதை வழங்கி பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் அவர்கள் கௌரவப்படுத்தினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...