மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களுக்கான பூத்தொடுக்கும் போட்டி மற்றும் சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி

மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் மக்கள் சேவை மையம் தொடங்கப்பட்டது.



இந்நிலையில், இம்மையத்தின் சார்பில் பெண்களுக்கான பூத்தொடுக்கும் போட்டி மற்றும் சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.



பாஜக-வின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100-க்கும்  மேற்பட்ட பெண்கள் பூத்தொடுக்கும் போட்டியில் பங்கேற்றனர். பின்னர், கனரா வங்கி சார்பில் பெண்களுக்கான சிறு தொழில் கடனுதவி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பெண்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணரும் விதமாக இன்று பூத்தொடுக்கும் போட்டி நடைபெறுகிறது. மனதை ஒருநிலைப்படுத்தும் விதமான இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும் பெண்கள், தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுகின்றனர். போட்டியில் வெற்றி பெரும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.



தொடர்ந்து, கனரா வங்கியின் சார்பில் பெண்களுக்கு சிறு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது சிறு தொழில்முனையும் பெண்களை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...