மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு புதியதாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு 18 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருபதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் பிரெயில் தட்டச்சு இயந்திரங்களுக்கு 18 சதவிகிதம் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கான பிரெயில் கடிகாரங்கள், காகிதங்கள், காது கேளாதோருக்கான காதொலி கருவி போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 12 சதவிகித வரி மற்றும் உடல் ஊனமுற்றோர் பயன்படுத்தும் ஊன்றுகோல், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செயற்கை கால்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவிகித வரியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை முழக்கமிட்டனர்.

மேலும், திரைப்படம், தங்க நகை போன்றவற்றிற்கு விதித்த ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்ததைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களின் வரியையும் குறைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...