மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணல் விலையேற்றம், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணல் தட்டுபாடின்றி கிடைத்தல், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். விலையேற்றத்தால் வேலை இழப்பு, நலவாரியத்தில் தேங்கி கிடைக்கும் பணபயன் விண்ணபங்களுக்கு காலதாமதமின்றி உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் கூறும்போது, தற்போது மணல் விலை 1 யூனிட்டிற்கு 30,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மணலுக்கு மாற்றாக கட்டிடங்களுக்கு உபயோகிக்கப்படும் எம்.சாண்ட் மணலானது மணல் போல் தரமில்லை. மேலும், கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்து 80 சதவிகிதம் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, மாநில அரசு இப்பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...