கண்ணம்பாளையத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

சூலூர் வட்டம், கண்ணம்பாளையத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

சூலூர் வட்டம், கண்ணம்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக தொடங்கப்பட வேண்டும் என கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் ஊர் மக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்களின் பங்குத் தொகை ரூ.10 ஆயிரம் கோவை துணை கருவூலத்தில் 1995 நவம்பர் 22ம் தேதியன்று செலுத்தப்பட்டுள்ளது.

கண்ணம்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவு, சட்டப் பேரவை மனுக்கள் குழு ஆகியோரிடம் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை மனுக்கள் குழு, "கோரிக்கை நியாயமானது, அரசுக்கு பரிந்துரைக்கப்படும்" என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் 27.06.2008, 22.01.2010 மற்றும் 21.01.2011 ஆகிய தேதிகளில் மூன்று முறையும் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 

கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட 37 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றை கண்ணம்பாளையத்தில் நிறுவக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து முறையீடும், தமிழக முதலமைச்சருக்கு மக்களின் சார்பில் 1007 தபால் அட்டைகளும் அனுப்பி வைக்கப்பட்டது.

எனவே, தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்கவுள்ள 30 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றாக கண்ணம்பாளையம் இடம் பெற மாவட்ட ஆட்சியர் தமிழக முதலமைச்சருக்கு பரிந்துரைக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...