மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழை மரங்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே வேளாண்நகர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையினை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வாழைமரக் கன்றுகளுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "மதுக்கடைக்கு அருகே தின்பண்டக்கடைகள் எதுவும் இல்லை. மது அருந்த வருவோர்க்கான இட வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அந்தக் கடையில் மது அருந்த வருவோர் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் மதுஅருந்திவிட்டு பாட்டில்களை விவசாய நிலத்திலேயே வீசிச் செல்கின்றனர். 

மேலும், மதுப்பிரியர்களால் அப்பகுதியில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள், பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் உரிய தீர்வு காண வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்.



இதேப்போன்று சுல்தான்பேட்டை ஒன்றியம், கள்ளம்பாளையம் ஊராட்சி செம்பாமக்குட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், செம்பாமக்குட்டையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மது அருந்த வருவோர் அவ்வழியாக நடமாடும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கின்றனர். இந்தக் கடையின் அருகிலேயே பழைய விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் மக்களுக்கு மதுபிரியர்களார் இடையூறுகள் ஏற்படுகின்றன. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்தக் கடையினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடை கட்டிட உரிமையாளர் துரை (எ) பாலகிருஷ்ணன் கூறுகையில், இது எனது சொந்தக் கட்டிடம். இங்கு மதுபானக் கடை அமைக்க நான் அனுமதி வழங்கியுள்ளேன். எனது கட்டிடத்தில் இயங்கும் கடையினை இடமாற்றம் செய்ய முறையிட பிறருக்கு உரிமை இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

ஒண்டிபுதூர் பகுதி மக்கள் மனு:-

கோவை 61-வது வார்டுக்குட்பட்ட ஒண்டிபுதூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், ஒண்டிபுதூர் பகுதி பட்டணம் இட்டேரி சாலையில் அதிகளவிலான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில், புதிதாக இப்பகுதியில் டாஸ்மாக் கடை கடந்த ஜூன் 8-ம் தேதியன்று துவங்கப்பட்டது. இந்தக் கடையினால் பொதுமக்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும், தற்போது டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் இதுவரையில் 3 கொலைகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை கொலை செய்து சடலத்தை பூமியில் புதைத்துவிட்டனர். இதனை 10 நாட்களுக்கு பின்புதான் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் முதலே மக்கள் போராடி வருகிறோம்.

இப்பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என பொள்ளாச்சி டாஸ்மாக் மேலாளர் பாலாஜியும் எங்களிடம் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், தற்போது இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரண மேற்கொண்டு ஒண்டிபுதூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...