ஸ்ரீ கிருஷ்ணா 2017 சாம்பியன் பட்டம் வென்ற கோவை தினமலர் கிரிக்கெட் அணி

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் மாவட்ட அளவிலான அனைத்து பத்திரிகையாளர் கிரிக்கெட் போட்டி மே 24 முதல் ஜூன் 10ம் தேதி வரை நடைபெற்றது.



இதில், மாவட்ட அளவில் 9 அணிகள் 'ஏ' மற்றும் 'பி' என இரு குழுக்கலாக பிரித்து ஏ-குழுவில் டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர், ஹலோ எப்எம், தி இந்து அணிகளும், பி- குழுவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் க்ரானிக்கல், தினகரன், மீடியா லெவன், சூரியன் எப்எம் ஆகிய அணிகளும் லீக் முறை போட்டியில் பங்கேற்றன.



இதன் இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தினமலர் அணி 19 ஓவர் முடிவுகளில் அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய டைம்ஸ் அப் இந்தியா அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணா 2017 சாம்பியன் பட்டம் வென்ற கோவை தினமலர் கிரிக்கெட் அணிக்கு ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் மெக்கட்ரானிக்ஸ் துறைத் தலைவர் பி.பாலமுருகன் மற்றும் மெக்கானிக்கல் துறைத் தலைவர் பி.அசோகவரதன் ஆகியோர் வெற்றிக் கோப்பையினை வழங்கினர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...