கோவையில் யானைகள் தொடர்பான பிரச்சனை குறித்து முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளதாக எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் பேட்டி


கோவை மாவட்டம் மதுக்கரை, தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 18 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யானை குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதங்களையும் ஏற்படுத்தி வந்தது. மேலும், 3 வளர்ப்பு மாடுகளையும், 1 ஆடுவையும் இது தாக்கியது.

இதனைத்தொடர்ந்து, இந்த யானை கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுத்து காட்டுக்குள் விரட்டும் முயற்சியாக கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த யானை மதுக்கரை அருகேயுள்ள அய்யாசாமி மலைப்பகுதியிலேயே சுற்றி வந்தது.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அந்த யானை உடல் நலக்குறைவினால் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர்  யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வனக்கோட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 11 யானைகள் உயிரிழந்து இருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், யானை இறந்த இடத்தை பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. அதற்கான போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யானைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வருகின்ற சட்டப்பேரபை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன்" என தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...