ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ, மாணவியர்களுக்கான 21 பள்ளி மாணவர் விடுதிகளும், 8 மாணவியர் விடுதிகளும், 3 கல்லூரி மாணவர் விடுதிகளும், 6 கல்லூரி மாணவியர்கள் விடுதிகளும், ஐடிஐ மாணவர்களுக்காக 1 விடுதியும் என 39 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்களை பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியர்களும், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியிலும் சேர தகுதி உடையவர். இவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

இருப்பிடத்தில் இருந்து நிலையத்தில் தொலைவு குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இருக்க வேண்டும்.

இவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவும், தங்கும் வசதியும், பாய், போர்வை, கட்டில் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

2017- 2018 ஆம் கல்வியாண்டிற்கு விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதிவாய்ந்த மாணவ, மாணவியர்களின் விண்ணப்பங்களை விடுதி காப்பாளர்களிடம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளில் வரும் ஜூலை 12ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் ஜூலை 27ம் தேதிக்குள்ளும் காப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் விபரங்கள் சம்பந்தப்பட்ட விடுதிகளின் விளம்பர பலகையில் வெளியிடப்படும்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...