அதிமுக பல அணிகலாக பிரிந்ததற்கு பாஜக காரணம் அல்ல என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி

அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதற்கு பாஜக காரணமல்ல எனவும் ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், கனவுகளையும் நனவாக்க அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

கோவை, திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

இது வரை இருந்த பிரதமர்களிலேயே மிகவும் வலிமையான பிரதமர் நரேந்திர மோடி. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது துரதிஷ்டவசமானது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தை பெரிதாக்க முயற்சி செய்கின்றனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளே விவசாயம் புறக்கணிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.

அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதற்கு பாஜக காரணமல்ல. ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், கனவுகளையும் நனவாக்க அதிமுக-வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மாட்டிறைச்சி தடை சட்டம் குறித்து தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதே எதிர்கட்சிகளின் வழக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தக்க நேரத்தில் அறிவிக்கப்படும். குடியரசுத் தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவே பாஜக விரும்புகிறது" என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

முதலில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெங்கையா நாயுடு மாலையில் கோவையில் நடைபெறும் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...