மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-விற்கு தடை!

இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் பெயர் பட்டியலில் வைகோ பெயர் உள்ளதால் மலேசிய அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் மகள் திருமண வரவேற்பு ஜூன் 10ம் தேதியன்று (நாளை) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அழைப்பினை ஏற்று மலேசியாவுக்குச் செல்வதற்காக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் வைகோ விசா கேட்டு விண்ணப்பித்தார். மலேசிய தூதரகம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வைகோவுக்கு விசா வழங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கடந்த வியாழனன்று (நேற்று) நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியாவிற்கு புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6.30 மணிக்கு கோலாலாம்பூர் விமான நிலையத்தினை அவர்கள் அடைந்தனர். இந்நிலையில், வைகோ-வை சோதனையிட்ட மலேசிய குடிவரவு அதிகாரிகள், வைகோ மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உயர் அதிகாரிகளை வைகோ சந்தித்த நிலையில், இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்புடையதாகக் கூறி மலேசியாவிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். வைகோவின் பாஸ்போட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், மலேசியா நாட்டுக்கு ஆபத்தானவர் என்ற பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி மற்றும் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் ஆகியோர் முயற்சித்தும் அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை. 

இதனிடையே, இன்று இரவு 10.45 மணிக்கு மலேசியாவில் இருந்து சென்னை வரும் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் வைகோ-வை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...