மின்சாரம் தாக்கி உயிரிழந்த அண்ணன், தங்கை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை மாவட்டத்தில் கடந்த புதனன்று பரவலாக கன மழை பெய்தது. இதில, உக்கடம் பகுதியில் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் சல்மான் (18), பானுமா (16) ஆகிய அண்ணன், தங்கைகள் உயிரிழந்தனர்.

அவர்களது உடலை மீட்ட உக்கடம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தோரின் உடலை வாங்க மறத்து அவர்களது உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து, உறவினர்களுடன் கோவை வடக்கு வருவாய்த் துறை கோட்டாட்சியர் சின்னசாமி மற்றும் வடக்கு வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 3 லட்சம் என 6 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...