மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகம் குறிவைத்து தாக்கப்படுகிறது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்


மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகம் குறிவைத்து தாக்கபடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மாடுகளை பாதுகாப்பதாக மத்திய அரசு வேஷம் போடுகிறது. தமிழ்நாட்டின் அடிப்படை மாநில உரிமை பரிக்கப்படுகிறது. மாநில உரிமைகளை காப்பாற்றியவர் ஜெயலலிதா. அவர்பின் வந்தவர்களுக்கு துணிச்சல் உண்டா என தெரியவில்லை. தமிழகத்தை ஆளுகிற இடத்தில் ஆள் இருக்கிறது போல் தெரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தனிப் பெருமை உள்ளது. வைர விழா நடத்துவதற்கு அனைத்து தகுதியும் அவருக்கு உள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாவடக்கத்துடன், கருணாநிதி-யின் சாதனைகளை ஒப்புகொள்ள வேண்டும். தமிழகத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழ்நாட்டிற்குள் பாரதீய ஜனதா கட்சி கால் அடி எடுத்து வைக்காமல் தடுக்கும் கட்சிக்கு, அரசியலில் ஒத்துழைப்பு வழங்கப்படும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...