மேற்கு தமிழக வளர்ச்சி குறித்து தமிழக முதலமைச்சரைச் சந்தித்த கொங்கு குளோபல் ஃபாரம் அமைப்பினர்


கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கொங்கு குளோபல் ஃபாரம் அமைப்பு. இந்த அமைப்பில் உள்ளோர், மேற்கு தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகின்றனர்.



அதன்படி, இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வனிதா மோகன் மற்றும் மேற்குறிப்பிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகள் குழு சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரைச் சந்தித்து மேற்கு தமிழக மேலாண்மை குறித்தான குறிப்பாணையினை வழங்கினர்.

அந்த குறிப்பாணையில், கோவையில் கிடப்பில் போடப்பட்டுள்ள விமான விரிவாக்கப் பணிகள் உடனடியாக துவங்க உத்தரவிட வேண்டும். மேலும், கடந்த 2011-ஆம் ஆண்டு கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதற்குண்டான சரியான வளர்ச்சிப் பணிகள் விமான நிலையத்தில் இல்லை.

கோவையில், வரலாறு காணாத அளவிற்கு தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதனைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து, கொங்கு குளோபல் ஃபாரம் சார்பில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன், போக்குவரத்துத் துறை தலைமைச் செயலாளர் பி.டபில்யு.சி.திராவிடர் உள்ளிட்டோரைச் சந்தித்தும் மேற்கு தமிழகத்தின் வளர்ச்சி குறித்தான குறிப்பாணையை வழங்கினர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...