கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் செங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு கரை அமைக்கும் பணி துவக்கம்


கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவையில் அமைந்துள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த தன்னார்வ அமைப்பில், 150-க்கும் மேற்பட்ட உறுப்பிணர்கள் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன்படி, இன்று கோவை சுண்டக்காமுத்துர் பகுதியில் உள்ள பல நூற்றாண்டு பழமையான கிணறு தூய்மை படுத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



இக்கிணற்றில் சுதை சிற்பங்கள், அழகிய கலை வேலைப்பாடுகள் நிறைந்து காணப்பட்டது. இதை தொல்லியல் துறை மூலம் ஆராய்ந்து இதன் தொன்மையை உறுதிபடுத்தும் படியும் இதனை பாதுகாக்கவும் அரசுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.



இதனைத்தொடர்ந்து, குனியமுத்தூர் செங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு கரை அமைக்கும் பணியில் இன்று ஐந்து ஜே.சி.பி இயந்திரங்கள், இரண்டு டிப்பர் லாரிகள் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், நாளை உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மாலை 4 மணியளவில் கோவை டாடபாத் பகுதியில் விழிப்புணர்வு தெருகூத்து மற்றும் சூழல் காக்கும் உறுதிமொழி எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...