வெள்ளலூரில் சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு திடீரென வெளியேரிய காட்டு யானை போத்தனூர் அருகே 4 பேரை தாக்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். மேலும், யானை தாக்குதலால் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்த விஜயகுமார் என்பரையும் அவரது 12 வயது மகள் காயத்ரியையும் யானை தாக்கியது. இதில் யானையால் மிதிக்கப்பட்ட காயத்ரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மகளைக் காப்பாற்றச் சென்ற விஜயகுமாரையும் யானை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து ஓடிய யானை வெள்ளலூர் பகுதியில் உள்ள ரைஸ்மில் பகுதியில் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ஜோதி, நாகரத்தினம் என்ற இரு பெண்களை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அங்கிருந்து தொடர்ந்து சென்ற யானை மேலும் மூவரை தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் வனப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ள யானையைக் காண அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அப்போது ஆர்வமிகுதியால் காட்டுப் பகுதிக்குள் இறங்கிய பழனிச்சாமி என்பவரை யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, மதுக்கரைக்கு உட்பட்ட குறும்பப்பாளையத்தில் செயல்பட்டு வந்த கடை ஒன்றையும் இந்த யானை உடைத்து சேதப்படுத்தியதாகவும், மேலும், இரண்டு நாட்களாக இந்த யானை குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அதிக ஆக்ரோஷத்தோடு சுற்றி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, காட்டு யானை தொடர்ந்து மக்களை தாக்கி வருவதால் வெள்ளலூர் பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சமம்பவ இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், கோட்டாட்சியர் மதுராந்தகி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.



இதனைத்தொடர்ந்து, உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் இந்த யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து மாரியப்பன், கலீம், கோவை சாடிவயளில் இருந்து சுஜய், பாரி ஆகிய 4 கும்கி யானைகள் வரவளைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...