மாநகராட்சி ஊழியர்களின் பல்வேறு பணிகள் குறித்து 67-வது வார்டில் மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 67-வது வார்டுக்குட்பட்ட மருதூர், பெருமாள் கோவில் வீதி மற்றும் மாரியம்மன் கோவில் வீதிகளில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றி வருவதையும் தேவைற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை ப.காந்திமதி ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, பெருமாள் கோவில் வீதி மற்றும் மாரியம்மன் கோவில் வீதியில் செயல்பட்டு வரும் மளிகைக் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் 50 மைக்ரான் குறைவாக உள்ளதா என மைக்ரான் மீட்டர் கருவி மூலம் மாநகராட்சி துணை ஆணையர் சோதனை செய்தார். இதில், 50 மைக்ரான் குறைவாக இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய மாநகராட்சி அலுலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...