ஜெம் மருத்துவமனைத் தலைவர் சி.பழனிவேலுவுக்கு கேரளா ஆளுநர் பி.சதாசிவம் வாழ்த்து

கோவை, கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜன் அரங்கில் நேற்று மாலை கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் ஜெம் மருத்துவமனைத் தலைவர் சி.பழனிவேலுவுக்கு  பாராட்டு விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரளா ஆளுநர் பி.சதாசிவம் கலந்து கொண்டு ஜெம் மருத்துவமனைத் தலைவர் சி.பழனிவேலுவுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.



பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது நம் நாட்டில் மருத்துவத் துறை நவீன வளர்ச்சி அடைந்து வருகிறது. அதே வேளையில், மருத்துவச் செலவு அதிகரிப்பதால் ஏழை, எளிய மக்கள் பாதிப்படைகின்றனர். அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சியுடன், மருத்துவர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.



முன்னதாக, விருது பெற்ற டாக்டர் சி.பழனிவேலு தனது ஏற்புரையில், கடந்த 2006-ஆம் ஆண்டு பி.சி.ராய் விருது பெற்றபோது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் என்னிடம், புற்றுநோய் குறித்து நம்நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதையடுத்து, 2013-ஆம் ஜெம் மருத்துவமனைக்கு அவர் வந்தபோது புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் அவருடன் சகஜமாக உரையாடியதைக் கண்டு மகிழ்ந்தார். மருத்துவத் துறை குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் எடுத்துச் செல்ல அப்துல் கலாமின் ஆலோசனைகள் முக்கியமானதாக அமைந்தன என்றார்.  



இந்த விழாவில், பேரூர் ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர அடிகளார், பாதிரியார்கள் ஜான் ஜோசப் ஸ்டேனிஸ், கே.சி.ரிச்சர்டு துரை, ராக் அமைப்பின் தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன், சி.ஐ.ஐ.தலைவர் எஸ்.நாராயணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் இ.பாலகுருசாமி, வழக்குரைஞர் வி.நந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்பினர் பங்கேற்றனர்.



Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...