கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.13.75 கோடி மதிப்பிலான 1.59 ஏக்கர் அளவு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்பு

கோவை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.13.75 கோடி மதிப்பிலான 1.59 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

“கோit மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வடவள்ளி, வார்டு-16, நியூ ஹேப்பி கார்டன் மற்றும் தட்டன் தோட்டம் பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 24.8 சென்ட் அளவிலான இடங்களும், வடவள்ளி, வார்டு-16, ராஜன் நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 31.55 சென்ட் அளவிலான இடங்களும், வடவள்ளி, வார்டு-16, பாலாஜி பத்மாவதி நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 31.55 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.

இதேப்போன்று கிழக்கு மண்டலம், காளப்பட்டி, வார்டு-36, மதுசூதனன் நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 20 சென்ட் அளவிலான இடங்களும், விளாங்குறிச்சி, வார்டு- 56, ஹவுசிங் யூனிட் பகுதியில் பொது ஒதுக்கீடு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளும், வடக்கு மண்டலம், சரவணம்பட்டி, வார்டு-31, ஸ்ரீ மாருதி நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.25 கோடி மதிப்பிலான 16 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் தெற்கு மண்டலம், குமாரபாளையம், வார்டு-76, சோமு அவென்யூ பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3.50 கோடி மதிப்பிலான 35 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம், சுமார் ரூ.13.75 கோடி மதிப்பிலான 1.59 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...