ஸ்மார்ட் கார்டுகளில் நிலவி வரும் பெயர் குழப்பங்களை நீக்க வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்


ஸ்மார்ட் கார்டுகளில் நிலவி வரும் பெயர் குழப்பங்களை நீக்க வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 6 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 972 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பொதுவினியோக திட்டத்தை முழு கணினிமயமாக்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று கோவையில் நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

தமிழக அரசின் முன்னோடி திட்டமான தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள ஒரு கோடியே 91 லட்சம் ரேசன் கார்டுகளில் ஒரு கோடியே 32 லட்சம் கார்டுதாரர்கள் தங்களது ஆதார் எண்களை முழுமையாக பதிவு செய்துள்ளனர். 52 லட்சம் பேர் பகுதியான தகவல்களை பதிவிட்டுள்ளனர். தகவல்களை பதிவிடாத ஒரு லட்சத்து 96 ஆயிரம் கார்டுதாரர்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

ஆதார் கார்ட்டில் இருந்து டிரான்ஸ்லேசன் செய்யும் போது ஏற்படும் குழப்பங்களால் சில ஸ்மார்ட் கார்டுகளில் பெயர்கள் மாறிவருவதாக புகார்கள் எழுகின்றன. இதனை களைய வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்சனைகள் சீர்செய்யப்படும். 

கோவை வட்டத்தில் மொத்தமுள்ள 9 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகளில் 3 லட்சத்து 52 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் அரிசி கடத்தலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் 972 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...