டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் உண்ணாவிரதம்

டாஸ்மாக் ஊரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் , டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று அரசுப்பணி வழங்கக் கோரியும் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  இன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களால்  சில இடங்களில் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவை சிவானந்தா காலனி பகுதியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



மேலும், இந்த போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு மாற்றுப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பணி வழங்க வேண்டும் எனவும் வலியுத்தினர். மேலும், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து மற்ற அரசு பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...