சவுரிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கோவை சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுமக்கள் வாயில் கருப்பு தூணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை சவுரிபாளையம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வேறு பகுதியில் மூடப்பட்ட 2 மதுக்கடைகள் சவுரிபாளையத்தில் அருகருகே திறக்கப்பட்டன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 4 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, சவுரிபாளையம் பகுதி பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அப்போது, சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானக்கடைகள் இல்லாத நிலையில், குடியிருப்பு, பள்ளிகள் நிறைந்த பகுதியில் 4 மதுபானக்கடைகள் இயங்கி வருவதால் மற்ற பகுதியில் இருந்து மது குடிக்க வருபவர்கள் திறந்தவெளியில் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இப்பகுதியில் 4 மதுபானக்கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த சனிக்கிழமை இரு கோஷ்டி மோதல் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டார். மதுபான கடைகளினால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கூறினர். 

மாவட்ட நிர்வாகம் உடனடியாக சவுரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால்  போராட்டங்களில் ஈடுபட உளளதாக தெரிவித்தனர்.

இதேபோல் சொக்கன்புதூர் பகுதியில் திமுக கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர், மதுபான கடை அமைக்க கடை கட்டி வாடகைக்கு கொடுதுள்ளதாகவும் இங்கு கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக அமையும். எனவே மதுபான கடை அமைவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...