பல்வேறு சிறப்பம்சங்களுடன் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 அறிமுகம்

இந்தியாவில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மேட் சீரியஸ்-ஐ கோவையில் அறிமுகம் செய்துள்ளது.

110 உந்துசக்தித் திறன் (சிசி), எல்இடி விளக்குகள், 3டி லோகோ, இருக்கையின் கீழ் பகுதியில் பொருட்கள் வைக்கும் பகுதியில் மின் விளக்கு, இரண்டு வண்ண இருக்கை உள்ளிட்டவையுடன், மேட் நீலம், மேட் சிவப்பு, மேட் மஞ்சள் மற்றும் மேட் கருப்பு நிறங்களில் இந்த புதிய ஜெஸ்ட் 110 வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதன் அறிமுக விழாவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவன இருசக்கர வாகன விற்பனை துணைத் தலைவர் பேசுகையில், தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட ஜெஸ்ட் வாகனம் 110 உந்துசக்தியுடன் உள்ளது நுகர்வோர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. மேலும், எல்இடி விளக்குகள், மேட் பூசப்பட்ட பல வண்ணங்களில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. டிவிஎஸ் தயாரிப்பில் ஜெஸ்ட் ஸ்கூட்டி மிகவும் சிறப்பு பெற்றதாக அமைந்துள்ளது.

இளைய தலைமுறையினர் அதிகம் பேர் இந்த வாகனங்களை விரும்பும் வகையில் இதன் உந்து சக்தியும், இன்ஜினும் செயல்படும். மேலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஜெஸ்ட் 110 வாகனம் 62 கிலோ மீட்டர் இயங்கும் தன்மை உடையது. 

இதன் ஆரம்ப விலையாக 50 ஆயிரத்து 286 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு தகுந்தவாறு இதன் விலையில் மாற்றம் ஏற்படும்" என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...