விவசாய நிலத்தில் கழிவுகளை சேர்க்கும் தனியார் நிறுவனங்களைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் கழிவுகளை ஆழ்குழாய் கிணறுகள் மூலம் விவசாய நிலங்களில் விடுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். 



கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள பயனியர் பெர்டிலைசர்ஸ் உரம் தயாரிக்கும் நிறுவனம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால், அருகம்பாளையம், ராசிபாளையம் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல ராசிபாளையம், முத்துகவுண்டன் புதூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுகிரகா வால்வ்ஸ், ஸ்ரீ ரங்கநாதர் வால்வ்ஸ், பயனியர் பிளைவுட் கம்பெனி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கழிவுகளை விவசாய நிலங்களில் விடும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தனியார் நிறுவனங்கள் கழிவுகளை விவசாய நிலங்களில் விடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உப்பு கலந்த நீரை கால்நடைகளுக்கு குடிக்கக் கூட கொடுக்க முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயம் பாழ்பட்டு வருவதால் விவசாயிகள் வாழ்வதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், இந்த நிறுவனங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...