தெற்கு ரயில்வேயின் முதுநிலை துணைப் பொதுமேலாளர் பொறுப்பேற்பு

ஜே.பி.பாண்டே தெற்கு ரயில்வேயின் முதுநிலை துணைப் பொதுமேலாளராகவும், தலைமை கண்காணிப்பு அதிகாரியாகவும், இன்று பொறுப்பேற்றார். அவருக்கு முன்னர் முதுநிலை துணைப் பொதுமேலாளராக பொறுப்பில் இருந்த ஆர்.முகுந்தன் ரயில்வே பணியில் இருந்து பணி ஓய்வு பெற்றதால், பாண்டே அப்பொறுப்பில் ரயில்வே வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாண்டே, கட்டுமானப் பொறியியலில் ரூர்கி ஐஐடியில் பி.டெக் பட்டமும், டெல்லி ஐஐடியில் எம்.டெக் பட்டமும் பெற்றுள்ளார். 1985ம் ஆண்டு ரயில்வேயின் பொருட்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தெற்கு ரயில்வேயில் பொறுப்பேற்கும் முன் மேற்கு ரயில்வேயின் பாவ்நகர் கோட்டத்தின் ரயில்வே கோட்ட மேலாளராக பணியாற்றி வந்தார்.

வடக்கு ரயில்வே மற்றும் வடமத்திய ரயில்வேயின் தலைமைப் பொருள்கட்டுப்பாட்டு அதிகாரியாகவும், வடமத்திய ரயில்வேயின் ஜான்சி கோட்டத்தில் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். 

மேலும் பாண்டே, 1998ம் ஆண்டில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலும், 2009-ம் ஆண்டில் சிங்கப்பூர் லீ குவான் யூ பொதுக் கோட்பாடு பல்கலைக் கழகத்திலும், 2015ம் ஆண்டு இத்தாலியில் உள்ள போக்கியோனி மேலாண்மைப் பல்கலைக் கழகத்திலும் சிறப்புப் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...