கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா செப்டம்பர் 25, 2026 அன்று தொடங்கி வைத்து கலந்து கொண்டார். ஈரக்கழிவு பச்சை தொட்டி, உலர் கழிவு நீள தொட்டி, சுகாதாரக் கழிவு சிவப்பு தொட்டி, சிறப்புக் கழிவு கருப்பு தொட்டி என நான்கு வண்ண உடையணிந்த மாநகராட்சி பணியாளர்கள், ஒளிரும் கோவை, ஆணிவேர், மகாராணி சங்கம், ஜி.கே.எஸ் சங்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் முதல் பொம்மனாம்பாளையம் வரை குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா செப்டம்பர் 25, 2026 அன்று தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.

கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை நடைபெற்ற இந்த நடைபயணத்தில், ஈரக்கழிவுகளை பச்சை நிறத்தொட்டியிலும், உலர் கழிவுகளை நீள நிறத்தொட்டியிலும், சுகாதாரக் கழிவுகளை சிவப்பு நிறத்தொட்டியிலும், சிறப்புக் கழிவுகளை கருப்பு நிறத்தொட்டியிலும் என நான்கு வகைகளாக தரம் பிரித்து முறையாக தூய்மைப்பணியாளர்களிடம் வழங்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நான்கு வகை தொட்டிகளின் நிறங்களுக்கு ஏற்றார்போல் உடையணிந்த மாநகராட்சி பணியாளர்கள், ஒளிரும் கோவை அமைப்பு, ஆணிவேர் அமைப்பு, மகாராணி சங்கம், ஜி.கே.எஸ் சங்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய கட்டா ரவி தேஜா, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும், ஈரக்கழிவுகளை பச்சை நிறத்தொட்டியிலும், உலர் கழிவுகளை நீள நிறத்தொட்டியிலும், சுகாதாரக் கழிவுகளை சிவப்பு நிறத்தொட்டியிலும், சிறப்புக் கழிவுகளை கருப்பு நிறத்தொட்டியிலும் தனித்தனியாக பிரித்து முறையாக தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, விழிப்புணர்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மேற்கு மண்டலத்திலுள்ள பல்வேறு தன்னார்வலர்கள், பொதுமக்கள் தாமாக முன்வந்து, இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், தங்களது வீட்டிலுள்ள குப்பைகளும் நான்குவகையாக பிரித்து வழங்குவோம் என தெரிவித்துள்ளதாகவும், அதற்காக நான்கு வகை குப்பைத் தொட்டிகளின் நிறங்களுக்கு ஏற்றார்போல் உடையணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் ரவி தேஜா கூறினார். மேலும், தாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் நான்கு வகைகளாக குப்பைகளை பிரித்து வழங்க அவர்களிடையேயும் தேவையான விழிப்புணர்வு பணிகளை முன் நின்று ஏற்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ரவி தேஜா, குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை 20 லிட்டர் தண்ணீர் பாட்டில்களிலும் மற்றும் வாகனங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வின்போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சுபாஷ்காந்தி, செயற்பொறியாளர் ஜெகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.