கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பல்வேறு பொதுமக்கள் நலன் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார். பீளமேடு பி.எஸ்.ஜி. தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தது, ராஜகோபால் லேஅவுட்டில் நடைபெற்ற ரங்கோலி போட்டி, கங்குவார் வீதி, கணக்குப்பிள்ளை வீதி, காவெட்டி ரங்கசாமி வீதி பகுதிகளில் கொசு புகை மருந்து தெளிக்கும் பணி, ஐயப்பன் கோயில் முன் குப்பை அகற்றும் பணி ஆகியவை இதில் அடங்கும். வார்டு மேற்பார்வையாளர் ஈஸ்வரியும் இதில் பங்கேற்றார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று காலை பல்வேறு பொதுமக்கள் நலன் மற்றும் தூய்மைப் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மற்றும் அதன் தரத்தை அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். மேலும், மாணவ, மாணவியர்களிடம் உணவு குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.



தொடர்ந்து, ‘கோவை மாநகராட்சி தூய்மை சேவை 2026’ திட்டத்தின் கீழ், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து மாநகராட்சி வாகனங்களில் வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ரங்கோலி போட்டியை அம்பிகா தனபால் பார்வையிட்டார். ராஜகோபால் லேஅவுட் பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்றனர். வார்டு மேற்பார்வையாளர் ஈஸ்வரி உடனிருந்தார்.



மேலும், பீளமேடு கங்குவார் வீதி, கணக்குப்பிள்ளை வீதி மற்றும் காவெட்டி ரங்கசாமி வீதி பகுதிகளில் நடைபெற்ற கொசு புகை மருந்து தெளிக்கும் பணியையும் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். சாக்கடைகளுக்குள் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டாமல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.



பீளமேடு ஐயப்பன் கோயில் முன்பு சாலையோரத்தில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணியையும் அம்பிகா தனபால் பார்வையிட்டு, குப்பைகள் அனைத்தையும் முழுமையாக அகற்றி அப்பகுதியை தூய்மையாக பராமரிக்குமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், குப்பைகள் மீண்டும் தேங்காத வகையில் தினசரி தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...