நீட் தேர்வை நோக்கி கல்விமுறையை மாற்றுவது தவறான விசயம்- திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

நீட் தேர்வை நோக்கி கல்விமுறையை மாற்றுவது என்பது தவறான விசயம் எனவும், சமச்சீர் கல்வியை மேம்படுத்த அதிமுக அரசு எதையும் செய்யவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது:-

நீட் மற்றும்  இந்தி திணிப்புக்கு எதிராக கோவையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமையின் உத்திரவுபடி வந்துள்ளேன். முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் வீடு, நிறுவனங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகள் குறித்து தற்போது கருத்து சொல்ல விரும்பவில்லை. 

தமிழகத்தில் நடைபெறும் அரசை தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யக்கூடிய அரசாக தற்போதைய தமிழக அரசு இருக்கின்றது. தமிழகத்தில் அரசாங்கம் செயல்படவில்லை. மத்திய அரசிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள தமிழகத்திற்கு விரோதமான, மக்கள் ஏற்றுக்கொள்ளாத விசயங்களை கூட மாநில அரசு ஏற்றுக்கொள்கின்றது. 

தன்னை காப்பாற்றிக்கொள்ளும் ஆர்வம் மக்களை காப்பாற்றுவதில் மாநில அரசுக்கு இல்லை. தமிழக மருத்துவர்களை தரம்குறைந்த மருத்துவர்களாக யாரும் பார்ப்பதில்லை. நீட் தேர்வினால் மட்டுமே தரமான மருத்துவக் கல்வி கொடுக்கமுடியும் என்பது தவறான வாதம். நீட் தேர்வை எதிர் நோக்கி  கல்விமுறையை மாற்றுவது  என்பது தவறான விசயம். 

ஆண்டுதோறும் சமச்சீர்கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும், கல்வியின் தரம் பரீசிலிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சிக்கவில்லை'' என அவர் பேசினார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...