பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் குற்றச்சாட்டு


நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்தும் விதமாக மோடி தலைமையிலான பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.



முத்தலாக் விவகாரம் தொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் பெண்கள் அணி பொறுப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்தும் விதமாக மோடி தலைமையிலான பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக குற்றம்சாட்டினார்கள். 

மேலும், கற்பழிப்புகளுக்கு எதிராக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவசர சட்டம் கொண்டு வராத பாஜக அரசு, முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வருவதேன் என கேள்வி எழுப்பினர்.

சிலர் தவறாக தலாக் முறையினை பயன்படுத்துவதால் ஒட்டு மொத்த சட்டத்தையும் தவறாக பாஜக சித்தரித்து பிரச்சனையாக்குவதாகவும், இது முழுக்க அரசியல் சதித்திட்டம் எனவும் கூறிய அவர்கள், இஸ்லாமிய பெண்களை பாதுகாக்க வேண்டிய எண்ணம் பாஜக-விற்கு கிடையாது என தெரிவித்தனர். மேலும், பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு பாதகமானது எனவும் அவர்கள் கூறினர்.

இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வருகின்ற மே 20 ஆம் தேதி பெண்களுக்கான பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...