கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை - ஒற்றை சாளர முறைகோரி மனு

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையை போல கலைக் கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையினை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, மதிமுக-வினர் இன்று கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மதிமுக இளைஞரணி மாநில செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான அக்கட்சியினர், கோவை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

அதில், தமிழகத்தில் உள்ள கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் ஒற்றை சாளர முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஈஸ்வரன், தமிழகத்தில் இந்தாண்டு 7 லட்சம் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை போல, கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையினை அமல்படுத்த வேண்டும்.

ஒற்றை சாளர முறையினை அமல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும், மதிப்பெண்களுக்கு ஏற்ப விரும்பிய கல்லூரி மற்றும் பாடங்களை தேர்வு செய்ய முடியும்" என ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...