வெள்ளலூர் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மனு


வெள்ளலூர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில்  கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், 

உக்கடம் பெரிய குளத்திற்கு தண்ணீர் திருப்பும் சட்டர், பாலம் கட்டுவதற்காக உடைக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் இனியும் சட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் குளத்திற்கு தண்ணீர் வருவது தடைபடலாம் அல்லது அதிக நீர் வாய்க்கால் குளத்தை உடைக்க நேரிடும்.

மேலும், வெள்ளலூர் வாய்க்கால் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரிடம் பேசி பத்து நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும், உக்கடம் வாய்க்கால் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் ஆட்சியர் உறுதியளித்தார்  என தெரிவித்தனர்.

முன்னதாக, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...