கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறையை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்


கோவை தாஜ் ஹோட்டலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றுத்துறை சார்பாக கட்டிடக் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தொடர்பாகவும், கட்டிடக் கழிவு மேலாண்மை தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறையை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை, உக்கடம் பகுதியில் ரூ.9 கோடி மதிப்பில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவிலான கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடிய ஆலையினை தமிழ்நாடு முதலமைச்சரால் மார்ச் 18ம் தேதியன்று அடிக்கல் நாட்டி திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. குறிப்பாக, பொதுமக்கள் வீடுகள் கட்டும் பொழுதும் மற்றும் வீடுகள், கட்டிடங்கள் இடிக்கும் பொழுதும் கட்டிட கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இதை தவிர்ப்பதற்காக இத்திட்டம் பொதுமக்களின் சேவைக்காக துவக்கப்பட்டது.

இக்கட்டிட கழிவுகளை கொண்டு மறுசுழற்சியாக செங்கல்கள், பேவர் பிளாக்ஸ் மற்றும் எம்-சேன்ட் போன்றவற்றை தயார் செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும், உக்கடம் பகுதியில் கட்டிடக் கழிவுகளை கொண்டு மறுசுழற்சி செய்யக்கூடிய இந்த ஆலையானது தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஆலையாகும். குறிப்பாக இந்த கட்டிடக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்காக மாநகராட்சியால் 17 இடங்களை சேகரிக்கும் மையங்கள் கண்டறியப்பட்டு கட்டிடக்கழிவுகளை சேகரிப்பதற்காக செயல்படுத்தவுள்ளது.

மேலும், இதனைத் தொடர்ந்து இன்று கோவை தாஜ் ஹோட்டலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றுத்துறை சார்பாக கட்டிடக் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தொடர்பாகவும், கட்டிடக் கழிவு மேலாண்மை தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.



இந்த ஒருநாள் பயிற்சி பட்டறையானது பல்வேறு மாநகராட்சியிலிருந்தும், நகராட்சியிலிருந்தும் வந்திருக்கும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு கட்டிடக்கழிவுகளை சிறப்பான முறையில் மறுசுழற்சி செய்து பயன்பெறுவதற்காக மேலாண்மை மற்றும் தொழில் நுட்ப பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் ஜெர்மன் டெவலப்மென்ட் கார்ப்பரேசன் திட்ட இயக்குனர் உவே பெக்கர், தொழில்நுட்ப ஆலோசகர் அபிஜித் பேனர்ஜி, புதுதில்லி டெவலப்மென்ட ஆல்டர்நெட்டிவ்ஸ், சுற்றுச்சூழல் தண்ணிரைவு மேலாளர் கிருஷ்ணா சந்திரன், சுற்றுச்சூழல் பொறியாளர்; புதுதில்லி அச்சு ஆர்.சேகர், மாநகராட்சி செயற்பொறியளர் (பொ) கே.சரவணகுமார், மண்டல உதவி ஆணையர்கள், மண்டல துப்புரவு அலுவலர்கள், பல்வேறு நகராட்சிப் பொறியாளர்கள், கட்டிட வல்லுனர்கள், பல்வேறு கட்டுமானத்துறை சார்ந்த உறுப்பினர்கள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...