கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் அனைத்து பணிகளையும் நேரில் ஆய்வு செய்து பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார். பணிகள் தரமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் பல்வேறு தூய்மைப் பணிகள் இன்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் கண்காணித்து ஆய்வு செய்தார்.






பீளமேடு கோபால் நகர் ராஜகோபால் லேஅவுட் பகுதியில் இன்று நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்பு பணியின்போது, கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. மேலும் bleaching பவுடர் தூவப்பட்டு, தண்ணீர் தொட்டிகளில் Abate மருந்து ஊற்றப்பட்டது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என ஆய்வு செய்தார்.






இதேபோல், பீளமேடு சாந்திநகர் பகுதியில் உள்ள பூங்காவில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டார். பூங்காவில் மேற்கொள்ளப்படும் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன் விவாதித்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.




மேலும், பீளமேடு பாரதி காலனி பகுதியில் உள்ள வார்டு AE அலுவலகத்தில் குவிந்திருந்த மர குப்பைகளை சுத்தம் செய்யும் பணியும் இன்று நடைபெற்றது. இந்த பணியையும் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து மர குப்பைகளும் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று தூய்மை பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.






பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மை குறித்து வார்டு கவுன்சிலர் தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...