அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர் வரத்து காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நீர்த்தேக்கங்களான அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் தொடர் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில், நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து கிடைத்து வருவதால், ஜூலை 24ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 49.18 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 40 கன அடி நீர்வரத்து இருப்பதாகவும், அணையில் இருந்து 740 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




இதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையில் தற்போது 35.56 அடி நீர்மட்டம் பதிவாகியுள்ளது. 60 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு வினாடிக்கு 160 கன அடி நீர்வரத்து கிடைத்து வருவதாகவும், அணையில் இருந்து 21 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.




இரு அணைகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர் வரத்து இருப்பதால், வரும் நாட்களில் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....