அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் - காவல் ஆய்வாளர் தென்னரசு வேண்டுகோள்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் முழுநிலவு விழிப்புணர்வுக் கூட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாய்க்கனூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு பயிற்சி மைய தன்னார்வலர் பயிற்றுனர் பத்மாவதி அனைவரையும் வரவேற்றார். கோடாங்கி பட்டி ஊராட்சி பொறியாளர் முத்துக்குமரன் வாழ்த்துரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆழியார் துணை காவல் ஆய்வாளர்கள் டி.தென்னரசு, சின்னசாமி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பின், ஆழியார் துணை காவல் ஆய்வாளர் டி.தென்னரசு பேசும் போது, கிராமப்புறங்களில் குழந்தைகள் சரிவர படிக்கவில்லை என்றால் வீட்டு வேலைகளுக்கு,  தோட்டம், பன்னையத்து வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதன் காரணமாக குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.

கல்வி அறிவு பெறாத குழந்தைகள் பெற்றோர்கள் செய்யும் தொழிலையே செய்யக் கூடிய சூழல் உருவாகிறது. இதன் காரணமாக குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெற்றோர்கள் குடும்ப சூழலை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதால் ஒரு தலை முறையை மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன், களப் பணியாளர் சரோஜா உட்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நிகழ்ச்சி மேலாளர் ஜே.இ.பீஜீ அலெக்ஸ் நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...