மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் ரத்தினம் கல்விக் குழும மாணவர்கள் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த சாலையின் ஓரத்தில் விசப்பட்ட 300 மதுபான பாட்டில்கள் மற்றும் பல நூறு கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பொருட்களையும் அகற்றினர்.



மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலையானது நீலகிரிக்கு இடையூறின்றி செல்லும் சாலை ஆகும். மேலும், போக்குவரத்து நெரிசல் குறைந்த இந்தச் சாலையினை ஒருசில பயணிகளே பயன்படுத்தி வரும் நிலையில், ஒருசிலர் அந்த சாலையில் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை சாலையின் ஓரத்தில் வீசிச்செல்கின்றனர். மேலும், தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றையும் சாலையில் வீசிச் செல்கின்றனர். 



இந்தச் சாலை வனப்பகுதிக்கு உட்பட்ட சாலை மற்றும் யானைகள் வழித்தடப் பாதையாகும். இதனால் சாலையில் வீசப்படும் மதுபாட்டில்கள் உடைந்து யானைகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் வைல்டு லைஃப் நேட்சர் கன்சர்வேசன் டிரஸ்ட், ரத்தினம் கல்விக் குழும மாணவர்கள், ஷெட்எஃப் வின்டு பவர் தனியார் நிறுவன ஊழியர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் வனத்துறையுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



இந்த தூய்மைப் பணியின் போது மேட்டுப்பாளையம்- கோத்தகிரிக்கு உட்பட்ட சாலையில் 300 மதுபான பாட்டில்களும், 300 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளும் சேகரிக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வனப்பகுதியில் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தவிர்க்க வேண்டும். அப்போதே வளமான பசுமையும், வன விலங்குகளும் காக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...