கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை திட்டமிட்டு கொலை செய்ததாகக் கூறி கரூரைச் சேர்ந்த இருவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கடந்த வாரம் 24 வயதான புகைப்படக் கலைஞர் பிரவீன் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அவரை கொலை செய்ததாகக் கூறி இருவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் அருகே மடத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான புகைப்படக் கலைஞர் பிரவீன், கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தில் புகைப்படம் எடுக்கும் பணி இருப்பதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பாததுடன், தொடர்பு கொள்ளவும் முடியாததால், அவரது குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
இதற்கிடையில், ஜூலை 3-ஆம் தேதி கிணத்துக்கடவு அருகே ஏ.பி.சி. திரையரங்கின் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. உடலை மீட்ட போத்தனூர் ரயில்வே போலீசார், அடையாளம் தெரியாத நபரின் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நேரத்தில் மீட்கப்பட்ட சடலம் பிரவீனுடையது என்பது தெரியாததால், தடாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவர் வழக்கும், போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரித்து வந்த அடையாளம் தெரியாத நபரின் மரணம் தொடர்பான வழக்கும் தனித்தனியாக விசாரணையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூலை 6-ஆம் தேதி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கோவை ஜே.எம்.-1 நீதிமன்றத்தில் சரணடைந்து, பிரவீனை கொலை செய்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பிரவீனை கொலை செய்ய திட்டமிட்டு, புகைப்படம் எடுக்கும் பணி இருப்பதாகக் கூறி கோவையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு வரவழைத்து, பின்னர் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலையை ரயில் விபத்து அல்லது தற்கொலை போல் சித்தரிக்கும் நோக்கில், அவரது உடலை கிணத்துக்கடவு அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பெண் ஒருவருடனான பழக்கம் தொடர்பான பிரச்சினை காரணமாக இந்தக் கொலை திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு தொடர்பாக தடாகம் போலீசாரும், போத்தனூர் ரயில்வே போலீசாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.