கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கணுவாயில் 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை நிறுத்தி வைத்து  அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.


கோவை: புதிய வாகன விலை உயர்வு, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கணுவாய் பகுதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதில் 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஜூன் 22 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகன விதிமுறைகள், வரி உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் எர்த் மூவர்ஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்தத் தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வாடகை கட்டணத்தை உயர்த்திடவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதும் மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் தொடர்புடைய வாகனங்கள் இயக்கப்படாமல் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கனிமவளக் கொள்ளையை தடுக்க, அரசு கனிம வளங்களை எடுக்க உரிய லைசென்ஸ் முறையில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், சங்கத்தின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக கட்டுமானத் துறை மற்றும் மண் அள்ளுதல் தொடர்பான பணிகளில் தற்காலிக பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...