“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டுமே திமுகவால் ஒதுக்கப்பட்டுள்ளதாக கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.


கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவைக்கேற்ப தேவையான மின்கட்டமைப்பு வசதிகளை கடந்த தி.மு.க அரசு உருவாக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

மின்வெட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் 3,500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கையாளும் திறன் உள்ள நிலையில், தற்போது 5,000 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை நம்பியே கடந்த தி.மு.க ஆட்சி செயல்பட்டதாகவும், கூடுதலாக போதிய பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், மேகதாது அணை கட்டக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழக முதல்வர் உறுதியாக இருப்பதாகவும், தமிழகத்தின் உரிமைக் குரலை பிரதமருக்கு கடிதங்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்திலும், கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால், போதிய நீர் கிடைத்த பிறகே அணை திறக்கப்படும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் எந்த முடிவையும் தெரிவிக்க முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது கட்சித் தலைவர் விஜய் முடிவு செய்வார். இதுதொடர்பாக பனையூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

சேலத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதியளித்த அவர், எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஊடகச் செய்திகளின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு விஜய் சென்றது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஆலயங்களுக்கு அனைவரும் செல்வது இயல்பான ஒன்று என்றும், அதேபோல் விஜயும் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், "சினிமா பிரபலங்கள் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார்கள் என்று கூறுபவர்கள், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் யார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல், மாணவிகளுக்கான "சிங்கப்பெண் படை" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதை படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...