கல்லூரி பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி பாஜக இளைஞர் அணியினர் ஆட்சியரிடம் மனு

கல்லூரி பகுதியில் அதிகளவில் நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி பாஜக இளைஞர் அணியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் என ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கல்லூரிகள் நிறைந்த இப்பகுதிகுயில் அதிகளவிலான கஞ்சா விற்பனைகளும் நடைபெற்று வருகிறது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. 

இதுகுறித்து, காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும், ரோந்து என்ற பெயரில் சென்று சிலரை கைது செய்து பின் விடுவித்து விடுகின்றனர். அவர்கள் தொடர்ந்து தங்களது கஞ்சா விற்பனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாதம்பட்டி- காலபாளையம் சாலையிலும் சமூக விரோதிகள் அதிகளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...