கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோசடி நடைபெறுவதாக எச்சரித்துள்ள கோவை மாவட்ட காவல்துறை, சந்தேக அழைப்புகள் குறித்து 1930-ல் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore:

கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி நடைபெற்று வரும் போலி அழைப்புகள் மற்றும் இணைய மோசடிகள் குறித்து கோவை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் அரசு அதிகாரிகள் அல்லது பள்ளி நிர்வாகத்தினர் எனத் தங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கச் செய்வதாகக் கூறி தொடர்பு கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி (OTP) எண்கள் மற்றும் முன்பணம் உள்ளிட்ட தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

அரசு அல்லது கல்வி நிறுவனங்கள் உதவித்தொகை பெறுவதற்காக பணம் கோருவதில்லை என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், வங்கி விவரங்கள் மற்றும் ஓடிபி எண்களை யாருடனும் பகிரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உதவித்தொகை தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது இணைய மோசடி முயற்சிகள் குறித்து உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...